நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் வாகனங்கள் வழங்கப்படவோ, இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவோ மாட்டாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று (05) அவர் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.
அரச வாகனம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையாற்றுவதற்காக வாகனங்கள் வழங்கப்படத் தான் வேண்டும். ஆனால் அதற்கு இது பொருத்தமான காலம் இல்லை.
இப்போதைக்கு நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கவில்லை.
அவர்களுக்கு அரசாங்க வாகனங்களும் வழங்கப்பட மாட்டாது. இறக்குமதி அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட மாட்டாது.
ஆனால் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் பொருத்தமான மாற்று ஏற்பாடு ஒன்றை நாங்கள் மேற்கொள்வோம் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.