முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த
தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை
வழங்க முடியும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார்.
யாழ்.கிளிநொச்சிமாவட்டங்களுக்குட்பட்ட 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய
தேசிய கட்சி சார்பில் வேட்புமனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில்
கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்குட்பட்ட 19 உள்ளூராட்சி மன்றங்களிலும் எமது
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில்
போட்டியிடவுள்ளோம்
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்கள்
அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம்
நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
பலர் அங்கவீனமானவர்களாக்கப்பட்டுள்ளார்கள்
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு
கொண்டு சென்ற போது எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டமை நீங்கள் அனைவரும் அறிந்ததே
மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் எமது கட்சியின் தலைவர்
பிரதமராக இருந்தமையினால் நாட்டினை பொருளாதார ரீதியில் பின்னடைவினை
ஏற்படுத்தாது சிறப்பாக வழிநடாத்திருந்தார்.

அதேபோல் 2009 ம் ஆண்டு
இனப்படுகொலை செய்த ராஜபக்ச அரசாங்கம் தெரிவு செய்த சிங்கள மக்களாலேயே அடித்து
விரட்டப்பட்ட சம்பவம் நமக்கு நினைவிருக்கும். அந்த தண்டனை கடவுளாலேயே
வழங்கப்பட்டது.
தமிழ் மக்கள்
வடக்கு கிழக்கு மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்தில் பொருளாதார
ரீதியில் பாதிக்கப்பட்டிருக்க வில்லை ஆனால் யுத்தம் முடிவுற்ற பின்னர் தான்
வடகிழக்கில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவினை சந்தித்துள்ளார்கள்.

எனவே தற்போது ஆட்சியில் உள்ள அனுர குமார தலைமையிலான அரசாங்கமானது மனிதாபிமான
ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுப்பதோடு பொருளாதார
ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நிலையினை கொண்டு வரவேண்டும்
குறிப்பாக வடக்கு கிழக்கில் வறுமை கோட்டுக்கு உட்பட்டுள்ள மக்களின் பொருளாதார
மேம்பாட்டுகுரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிந்தித்து
வாக்குகளிக்க வேண்டும் அதன் மூலம் தமது பிரதேசத்தில்பொருளாதார மற்றும்
உட்கட்டுமான விடயங்களினை முன்னேற்றம் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.






