ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) எவராலும் இலகுவாகப் பிணைக் கைதியாகப் பிடிக்கலாம் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரணில் மற்றவர்களை பணயக்கைதிகளாக பிடிக்க கூடியவர் எனவும் சேனாரத்ன தெரிவித்தார்.
பணயக்கைதியாக மாறிவிட்ட ரணில்
ரணில் இரண்டு மூன்று பேரின் பணயக்கைதியாக மாறிவிட்டதாக ரவி கருணாநாயக்க(ravi karunanayake) தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு(colombo) மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
புதிய ஜனநாயக முன்னணியில் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் பெரும் சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.