முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரித்த படுகொலைகள்: சபையில் சஜித்திற்கு அரசாங்க தரப்பு பதிலடி!

சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்தார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச (Sajith Premadasa) இன்று (27) எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களின் அச்சம்

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்து, வன்முறை குற்றங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிகரித்த படுகொலைகள்: சபையில் சஜித்திற்கு அரசாங்க தரப்பு பதிலடி! | No Significant Increase In Crimes Govt

அத்தோடு, 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கை ஆகியவற்றிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு தொடர்பில் விமர்சனங்களையும் எதிர்க்கட்சித் தலைவர் அதன்போது, முன்வைத்திருந்தார்.

இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளின் செல்வாக்கு அதிகரித்து வருவது பொதுமக்களின் அச்சங்களை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச் சம்பவங்கள்

அதன்படி, இவற்றுக்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதிகரித்த படுகொலைகள்: சபையில் சஜித்திற்கு அரசாங்க தரப்பு பதிலடி! | No Significant Increase In Crimes Govt

இந்த நிலையில், கடந்த கால குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் அதேபோன்ற நிலைமை காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You may like this

https://www.youtube.com/embed/64ATk8hbFQE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.