இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பிரதி
பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது
கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு இன்று (14) கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உரிமை மீறல்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்கள் இடம் பெற
இல்லை.போரிலே சில அசம்பாவிதங்கள் இடம் பெற்று இருக்கலாம்.
அதற்காக மனித உரிமை
மீறல்கள் இடம் பெற்று இருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது என்கிற
அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தனது கருத்தை கூறி இருக்கிறார்.

இன்று செம்மணி மனித புதைகுழிகள் சாட்சிகளாக கருதப்படுகின்ற நிலையிலே செம்மணி
மனித புதைகுழி கூட மனித உரிமை மீறலாக இருக்காது என்கிற அடிப்படையில் பிரதி
பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளது.
ஐ.நா.சபை தனது ஆழமான கருத்தையும் கோபத்தையும் காண்பித்துள்ளது.
அதனடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இக் கருத்தை தெரிவித்த மையானது
கண்டனத்திற்குரிய விடயம்.
குற்றச்சாட்டுக்கள்
இந்த அரசு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான
விசாரணை செய்வதாக கூறுகின்ற நிலையில் இன்னும் ஒரு கருத்தாக பிரதி பாதுகாப்பு
அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது
சபாநாயகர் அதற்கான அனுமதி யை வழங்கவில்லை.

அவர் மீது குற்றச்சாட்டுக்கள்
இருக்கிறது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல்பாட்டில் குறிப்பாக அவர் இராணுவத்தின் உயர் பதவியில் இருந்த காரணத்தினால் குறித்த சம்பவத்துடன் அவர்
தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எமது தேசத்தில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோதிர்கள் என பார்க்காது கொடுரமாக
சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட வரலாறு இன்று எழுதப்படுகின்ற
வகையிலே செம்மணி மனித புதை குழி காணப்படுகின்றது.
ஆகவே ஐ.நா.சபையும் தனது கருத்தை கூறியுள்ளது.
உள்ளக விசாரணை யை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே பிரதி அமைச்சர் குறித்த
விடயம் தொடர்பில் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்தார்.

