முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு – கிழக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு: சபையில் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி

வடக்கு – கிழக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கான தளங்கள் எங்கேயும் திறக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் (S.Shritharan) சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று(18) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இப்போது யாழ்ப்பாணத்தில் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு பிரியாணி மற்றும் சாப்பாட்டுக் கடைகள் திறக்கப்படுகின்றன. 

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தளங்கள்

இவ்வாறு சுற்றுலாப் பயணிகளுக்கு சாப்பாடு கொடுக்க பிரியாணி கடைகள் திறக்கப்படுகின்றனவே தவிர, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் உள்ள இளைஞர்களுக்கான வேலைக்கான தளம் எங்கே திறக்கப்படுகின்றது? 

வடக்கு - கிழக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு: சபையில் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி | North Side No Employment For Youth Sritharan Mp

உற்பத்தித்துறை, வேலை வாய்ப்புக்கான தளங்கள் தள்ளிப் போகின்றன. 

உங்களின் ஐந்தாண்டுகளில் செய்யும் ஆட்சியே அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்கான உங்களின் முன்னேற்றமான முயற்சிகளுக்கு எங்களின் ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

சீமெந்து தொழிற்சாலை

இதேவேளை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. 

வடக்கு - கிழக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு: சபையில் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி | North Side No Employment For Youth Sritharan Mp

அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை. 

மேலும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஒரு காலத்தில் ஆசியாவில் பெயர்போன தொழிற்சாலையாகும். இப்போது அவ்விடத்தில் தொழில் பேட்டையை உருவாக்குவதாக இந்த அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.”என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.