எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்
போட்டியிடுவதில்லை என தமிழரசுக்
கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ.
சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (09) தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி
மன்றத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அந்தவகையில் கொழும்பு மாநகரசபையில் தமிழ்மக்கள் வசிக்காத வட்டாரங்களும்
உள்ளது.
அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை
ஏற்ப்படுத்தியுள்ளது.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன்
வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள
காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்தியசெயற்குழு
தீர்மானித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.