தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க கொழும்பில் தெரிவித்தார்.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் நாயகம்
கொழும்பில் நடைபெற்ற இந்த செயலமர்வு பவ்ரல் அமைப்பின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகளை பார்க்கிறோம் அவர்கள் இல்லாமல் தேர்தல் இல்லை.. தேசியக் கொடியின் பெருமை இன்று நாய்களுக்குப் போய்விட்டது.எனவே, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்.
கிரிக்கெட் போட்டிகளில் தேசியக் கொடி
இப்போது கிரிக்கெட் போட்டிகளில், தேசியக் கொடியை சுற்றிக் கொண்டு, ஒரு கையில் மது போத்தலை வைத்துக் கொண்டு நடனமாடுகிறார்கள் அதில் எந்த அரசியல் தத்துவமும் இல்லை.
நாட்டின் வளர்ச்சியை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. வீதி அமைத்து திறப்பது பிரச்சனை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் பிரச்சனைக்கு வரத் தேவையில்லை. அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் மக்கள் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.