முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியா செல்வோருக்கு வெளியான தகவல்

ஐரோப்பாவிலிருந்து (Europe) பிரித்தானியாவுக்கு(Uk) பயணிப்போருக்கான விதிகளில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மாற்றங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிரித்தானியாவுக்கு பயணிக்கும் சகல ஐரோப்பிய குடிமக்களும் இனி electronic travel authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் ஒன்றைப் பெறுவது கட்டாயமாகும்.

ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத் திட்டம்

இதன் அடிப்படையில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி,  அன்டோரா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பேர்க், மோல்டா, மொனாக்கோ, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா. சான் மரினோ, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களுக்கு இந்த மின்னணு பயண அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியா செல்வோருக்கு வெளியான தகவல் | Notice For Travelers From France To The Uk

அயர்லாந்து (Ireland) ஐரோப்பிய ஒன்றிய நாடாக இருந்தாலும் அதன் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களுக்கு இந்த நடைமுறையில் விதிவிலக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று வாழும் ஐரோப்பிய குடிமக்களும் (Settled Status & pre-Settled Status) இந்த மின்னணு பயண அங்கீகாரத்தைப்பெற வேண்டிய அவசியமில்லை.

இந்த மின்னணு பயண அங்கீகாரம் பயணத்துக்கு அவசியமானாலும் இதனைபெற்ற ஒருவர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு உத்தரவாதம் இல்லை.

மின்னணு பயண அங்கீகாரம்

அதன்படி, ஒருவர் பிரித்தானியாவுக்குள் பயணிப்பதற்குரிய மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட நபரை நாட்டுக்குள் அனுமதிப்பதாக இல்லையா என்பதை எல்லைகட்டுப்பாட்டு அதிகாரிதான் முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியா செல்வோருக்கு வெளியான தகவல் | Notice For Travelers From France To The Uk

இந்த மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நிகழ்நிலை (Online) விண்ணப்பங்களை, இம்மாதம் (March) 5ஆம் திகதி முதல் அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும்.

பின்னர் அதை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுவருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.