முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Novocaine திரை விமர்சனம்

ஜேக் குயிட் நடிப்பில் டேன் பெர்க் இயக்கியிருக்கும் ‘Novocaine’ ஹாலிவுட் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

கதைக்களம்

பேங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலைபார்ப்பவர் நாதன் கெய்ன். இவருக்கு Congenital insensitivity to pain என்ற பிரச்சனை இருக்கிறது.

அதாவது வெப்பம், குளிர், வலியை இவரால் உணர முடியாது.

இதனால் தனக்கென சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

ஒருநாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஷெர்ரி மார்க்ரேவ் என்ற பெண்ணுடன் சாப்பிட செல்கிறார் கெய்ன்.

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

அவருக்கு ஒவ்வாத உணவை ஷெர்ரி சாப்பிட சொல்ல, முதலில் மறுத்து பின் சாப்பிட அவரை அது ஒன்றும் செய்யவில்லை.

இதனால் சந்தோஷப்படும் கெய்ன் ஷெர்ரியுடன் ஓர் இரவை கழிக்கிறார்.

மறுநாள் பேங்கில் திடீரென நுழையும் கொள்ளையர்கள், மேனேஜரை கொன்றுவிட்டு பணத்துடன் ஷெர்ரியையும் கடத்தி செல்கின்றனர்.

சண்டை சச்சரவுக்கு சென்று பழக்கமில்லாத கெய்ன் காதலியை காப்பாற்ற கிளம்புகிறார். அதன் பின்னர் நடக்கும் காமெடி ஆக்ஷ்ன் தான் மீதிப்படம்.  

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

படம் பற்றிய அலசல்

நாதன் கெய்ன் கதாபாத்திரத்தில் “The Boys” புகழ் ஜேக் குயிட் நடித்துள்ளார். எமோஷனல், காமெடி, காதல் என அனைத்திலும் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.

அவருக்கு இருக்கும் பிரச்சனையை வைத்து பல இடங்களில் காமெடியை ஒர்க் அவுட் செய்திருக்கிறார் இயக்குநர் டேன் பெர்க்.

ஒரு சாதாரண ஆள் அசாதாரண வேலையை செய்து முடிக்கும் வழக்கமான கதைக்களம்தான் என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் பரபரவென நகர்கிறது படம்.

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

ஸ்வீட்ஹார்ட் படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஸ்வீட்ஹார்ட் படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜேக் குயிட் மற்றும் ஷெர்ரி ஆக நடித்திருக்கும் ஆம்பர் மிட்தண்டர் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “எல்லோரிடமும் ரகசியத்தை கூற முடியாது, அதற்கான ஆளிடம் தான் காட்ட முடியும்” என்று ஒரு காட்சியில் ஹீரோயின் ஜேக்கிடம் சொல்வது அழகியல்.

படம் முழுக்க ஒர்க்அவுட் ஆகியிருக்கும் காமெடி நமக்கு வயிற்று வலியையே வரவழைக்கும்.

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

மரகத நாணயம் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போலவே அமைக்கப்பட்டுள்ள டார்ச்சர் காட்சி காமெடியின் உச்சம்.

மார்வெல், ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக ஜேக்கப் படலோனின் என்ட்ரி இருக்கும். ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் அவர் பின்னியிருக்கிறார்.  

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் நடிப்பு

பரபரப்பான திரைக்கதை

காமெடி காட்சிகள்

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் அதிரடியான காமெடியில் நம்மை என்டர்டைன் செய்கிறார் இந்த Novocaine. ஜாலியாக பார்க்கக்கூடிய படம்தான்.

Novocaine திரை விமர்சனம் | Novocaine Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.