அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் பொருளாதார செயற்திட்டம் எதுவும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை
பொருளாதார செயற் திட்டம்
நாட்டை மீட்டெடுக்கக் கூடிய நடைமுறைச் சாத்தியப்பாடுடைய பொருளாதார செயற் திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மட்டுமே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார செயற் திட்டம் இருந்திருந்தால் பொருளாதார குழுவுடனான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
காத்திரமான பொருளாதார திட்டமொன்று இல்லாத காரணத்தினால் விவாதத்தை தவிர்த்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாக்குகளுக்காக நடக்கும் தீவிர போட்டி! தமிழில் உரையாற்றி அசத்திய சஜித்