கிளிநொச்சி (Kilinochchi)- பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி இன்று (24) தாக்கல் செய்துள்ளது.
வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் வரை நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல்
இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தலைமையில் வேட்பு மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டி உள்ளூராட்சி
மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.