மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை அநுர அரசாங்கமும் பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பேரணி
நேற்றைய தினம் நடைபெற்ற பேரணி தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த பேரணி நடைபெற்ற பகுதிகளில் புல்லு கட்டுகளை கட்டுவது ஒலிபெருக்கிகளுக்கான மின்சார இணைப்பை துண்டிப்பது போன்றவை சில்லறை வேலை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவிதமான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் ராஜபக்சகளும் மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது என தெரிவித்துள்ளார்.
ரணிலின் பொருளாதார கொள்கை
இந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் ரணிலின் பொருளாதார கொள்கையாகவே காணப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் ராஜபக்சக்களின் அரசியல் நடவடிக்கைகளை பின்பற்றியதாகவே காணப்படுகின்றது என முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் செய்ததை செய்யக்கூடாது புதிய விடயங்களை செய்வோம் என உறுதியளித்த அரசாங்கம் பழைய விடயங்களையே செய்கின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

