ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, கொழும்பு மாநகர சபையில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோக்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐந்து சுயேச்சைக் குழுக்களில் இருந்து ஒன்பது உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

