முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களது விமான பயணம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சபாநாயகர் உள்ளிட்டோர் மேற்கொண்ட விமான பயணம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச, சபாநாயகர் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்களது விமான பயண டிக்கட் தொடர்பில் விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் எக்கனாமி கிளாஸ் (மலிவு விலையிலான விமான டிக்கட்) டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் விமானத்தில் ஏறியதன் பின்னர் தங்களது டிக்கெட்டுகளை பிசினஸ் கிளாஸ் (ஆடம்பர வசதி கொண்ட விமான டிக்கட்) டிக்கெட்டுகளாக மாற்றிக் கொண்டுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்களின் பணம் விரயம்

பெரும் நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் இந்த நடவடிக்கையானது முற்று முழுதாக ஓர் மோசடி நடவடிக்கை என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களது விமான பயணம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை | Npp Travels Criticized By Sjb

ஐக்கிய ராச்சியத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் எக்கனாமிக் கிளாஸ் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து இருந்த போதிலும் விமானத்தில் ஏறியதன் பின்னர் விமான டிக்கெட்டுகளை பிசினஸ் கிளாஸ் ஆக மாற்றிக் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டிக்கெட் மாற்றம் தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்களது இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து அதிருப்தி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் எவ்வித வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொள்ளவில்லை என கூறும் ஆளும் கட்சியினர் எக்கனாமிக் கிளாஸ் விமான டிக்கெட் கொள்வனவு செய்து பின்னர் அதனை விமானத்தில் வைத்து பிசினஸ் கிளாஸ் ஆக மாற்றிக் கொண்டமை மக்களை ஏமாற்றம் செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூயவர்களாக காட்டிக் கொள்ளும் ஆளும் கட்சி

முன்னாள் ஜனாதிபதிகள் நேரடியாகவே பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து பயணம் செய்திருந்தனர் எனவும் எனினும் ஆளும் கட்சியினர் மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரியளவு நட்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பயணம் செய்யும் ஆளும் கட்சியினர் மக்கள் பணத்தை இவ்வாறு விரயமாக்குவது பொருந்துமா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களது விமான பயணம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை | Npp Travels Criticized By Sjb

அரச தலைவர்கள் வெளிநாட்டு விஜயங்களின் போது ராஜதந்திர செயல்பாடுகளில் ஈடுபட்டு நாட்டுக்கு நலன்களை பெற்றுக் கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எவ்வாறெனினும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களின் போது அங்கு வாழும் இலங்கையர்களை சந்திப்பதனையே முதன்மை நோக்காக கொண்டு செயல்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் காணப்படும் இரவு கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்களில் இலங்கயைர்களை சந்திப்பதாகவும் இவ்வாறு சந்திப்போரில் சிலர் உண்டியல்காரர்கள் எனவும் சிலர் டீல்காரர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் இவ்வாறு சென்றிருந்தாலும் அவர்கள் மக்கள் பணத்தில் அவ்வாறு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை ஆடை அணிந்து தூயவர்களாக காட்டிக் கொள்ளும் இந்த ஆளும் கட்சியினரின் உண்மை முகங்களை மக்கள் அறிந்து கொள்ளவில்லை என வருண ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.