தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறைமை
அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை கிடையாது என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவு
விருப்பு வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் சட்டம் எனவும் அதற்கு புறம்பாக செயற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தற்பொழுது பாரிய மக்கள் கட்சியாக உருப்பெற்றுள்ளது எனவும் கடந்த காலங்களில் சின்னத்திற்காக மட்டும் வாக்கு கேட்டதாகவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.