தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது போதைப்பொருள் மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இதற்கு முக்கியக் காரணம் சில அரசியல் தலைவர்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் எந்தவிதத்திலும் போதைப்பொருள் கடத்தலாளர்களுக்கு உதவிகளை வழங்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை உறுதியாக நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கும் எந்தவித அரசியல் ஆதரவும் வழங்கப்படவில்லை என பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

