கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விடயமானது, மெக்கில் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் கனடா(McGill Institute for the Study of Canada) என்று அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு
குடியேறும் நாடுகள்
அதன்படி, 2017 – 2019 ஆம் வருடங்களுக்கிடயில் கனடாவை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 31 வீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு வெளியேறியவர்கள் தற்போது, அமெரிக்கா, ஹொங்கொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியேற காரணம்
அத்தோடு, பல்வேறு காரணங்களால் அவர்கள் இவ்வாறு அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதானமாக, கனடாவில் குடியிருக்க சரியான வீடுகள் கிடைக்காத காரணத்தினால் குடியுரிமை பெற்றவர்கள் கூட நான்கு அல்லது ஏழு வருடங்களுக்குள் இந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |