முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

ஜக்கிய மக்கள்
சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
கட்சிக்கு கட்சி தாவிய நிலையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதோடு அந்த கட்சி சபையை கைப்பற்றியுள்ளது.

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்யும்
அமர்வு இன்று திங்கட்கிழமை (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி

இதன்போது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் அமர்வில் கலந்து
கொள்ளாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ்
அமர்வின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறி தவிசாளராகவும், ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.எம்.எஸ்.எம். கலாட்டீன் ஆகியோர்
தவிசாளருக்கு போட்டியிட்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம் | Oddamavadi Vc Hands Of Sri Lanka Muslim Congress

இதன்போது திறந்த வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டபோது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
கட்சிக்கு மாறிய முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் 9 வாக்குகளால் தவிசாளராக தெரிவு
செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிரதி தவிசாளருக்கு சிறிலங்கா முஸ்லீம்
காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்
எல்.எல்.எம். யலால்தீன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் பிரதி தவிசாளராக
முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ் 9 வாக்குகளால் தெரிவு
செய்யப்பட்டார்.

19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 08
உறுப்பினர்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 06 உறுப்பினர்களையும் தேசிய
மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி – 01
உறுப்பினரையும், சுயேட்சைக்குழு 01 உறுப்பினரையும் பெற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.