பகத் நடித்தாலே அது தரமான படமாக தான் இருக்கும் என்று இந்த காலக்கட்டத்தில் ஆகிவிட, அல்தாப் இயக்கத்தில் பகத், கல்யாணி நடித்த இந்த Odum Kuthira Chaadum Kuthira அப்படி ஒரு தரமான படமாக இருந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே பகத்-கல்யாணிக்கு திருமணம், அப்போது கல்யாணி தான் ஒரு கனவு கண்டதாகவும், அதில் நீ குதிரையில் வருவது போல் இருந்தது, அதேபோல் நீ நம் திருமணத்திற்கு வரவேண்டும் என சொல்கிறார்.
அவரும் இரவோடு இரவாக ஒரு குதிரையை ரெடி செய்கிறார்.
அடுத்த நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது குதிரை துள்ளி குதிக்க பகத் கீழே விழுந்து மண்டையில் அடிப்பட்டு பல மாதங்கள் கோமாக்கு செல்கிறார்.
இதனால் பல மாதம் காத்திருந்த கல்யாணி இனி இது செட் ஆகாது என்று அடுத்து வேறு ஒருவருடன் திருமணத்திற்கு கமிட் ஆகிறார்.
அந்த நேரத்தில் பகத்திற்கு திடீரென சுயநினைவு வர, பிறகு என்ன ஆனது பகத்-கல்யாணி திருமணம் மீண்டும் நடந்ததா, இல்லை பகத்-ம் அடுத்த காதலுக்கு சென்றாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பகத் எந்த ஒரு ரோல்-ம் செம கேஷுவல் ஆக ஸ்கோர் செய்பவர், இதில் மட்டும் விடுவாரா, செம ஜாலியான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் செம கலகலப்பாக கலக்கியுள்ளார்.
அதிலும் கல்யாணியை அவர் கண்ணத்தில் அடிக்க செய்யும் ரியாக்ஸன் எல்லாம் செம.
கல்யாணியும் படத்தின் முதல் பாதி முழுவதும் ஆக்ரமிக்கிறார், அவருக்கும் பகத்-க்குனாக ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் ஜாலியாக கொண்டு சென்றுள்ளனர்.
ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம்
இரண்டாம் பாதி கல்யாணியுடன் ப்ரேக் அப் ஆகி அடுத்த காதலுக்கு பகத் செல்வது அங்கு ரேவதி என்ற பெண் வருவது, அவருக்கான பிரச்சனை அதை எப்படி பகத் சரி செய்கிறார், பகத் தனக்கான துணையை கண்டுப்பிடித்தாரா என்று கதை நீள்கிறது.
படத்தில் பல எமோஷ்னல் தருணங்கள் இருந்தாலும் அடுத்த காட்சியில் காமெடி வந்தால் பரவாயில்லை, அதே காட்சியிலேயே காமெடி டயலாக் வருவது இப்போது சிரிக்கவா, சீரியஸ் ஆகவே என்றே படம் முழுவதும் தொடர்கிறது.
இது டைரக்டர் அல்தாப் ஸ்டைல் என்றாலும் படம் முழுவதும் இப்படி சீரியஸ் காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சி செய்வது கொஞ்சம் படத்திற்கே பேக் பயர் ஆகிறது.
அதிலும் இரண்டாம் பாதி ஒரு கட்டத்திற்கு மேல் அட என்ன தான்ப சொல்ல வறீங்க, இதுக்கு ஒரு முடிவு இல்லையா என்பது போல் தோன்றுகிறது.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை படத்திற்கு கூடுதல் பலம்.
க்ளாப்ஸ்
பகத்- கல்யாணி காட்சிகள்
படத்தின் முதல் பாதி
பல்ப்ஸ்
மிகவும் நீளும் இரண்டாம் பாதி.
மேலே சொன்னது போல் ஒரு எமோஷ்னல் காட்சியும் நம்மை எமோஷ்னல் ஆக்காமல் அடுத்த சீனே சிரிக்க வைக்க முயற்சிப்பது.
மொத்தத்தில் ஓடும் குதிரை சாடும் குதிரை அழகான கதையில் அழுத்தமே இல்லாமல் ஓடுகிறது திரைக்கதை.