விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 9ம் சீசன் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் தான் என விமர்சனத்தை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று நான்கு புது வைல்டு கார்டு எண்ட்ரியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர்.

பழைய போட்டியாளர்கள் என்ட்ரி
மக்களை பிக் பாஸ் ஷோ பார்க்க வைக்க தற்போது புது முயற்சியில் விஜய் டிவி களமிறங்கி இருக்கிறது.
அடுத்த வாரம் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் கெஸ்ட் ஆக முந்தைய சீசன் போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர்.
இதன் மூலமாக பிக் பாஸ் மீண்டும் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறுமா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


