மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்றையதினம் (12) முதன் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்திருந்த நிலையில் அங்கு மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் ஜனாதிபதியை புகழ்ந்து பாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த முதியவர் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதிக்கு தமிழ் முஸ்லீம் மக்களாகிய நாம் எல்லோரும் இணைந்து அவருக்கான ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதியவர் மேடையில் பேசி முடித்தவுடன் அநுர அவரை வாரி அணைத்துக் கொண்ட சம்பவம் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பான காணொளியை கீழே பார்வையிடலாம்….

