எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.எனினும் இதில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
தேர்தல் செயற்பாடுகள்
39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஆறு வேட்பாளர்களே தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசார செலவு குறித்து நாளையேனும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் அனைத்து வேட்பாளர்களும் அதன் அடிப்படையில் செயற்பாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களுக்கு அமைய வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டங்களின் போது தேசிய மற்றும் பௌத்த கொடி பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.