முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒன்றாரியோவில் நிலவும் கடும் பனிப்பொழிவு: மாகாண தேர்தல் பாதிப்பு

கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒட்டாவா, டொரொன்டொ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சினை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக பிரதானி க்ரெக் ஃப்ளட் (Greg Flood) தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்களிப்பு மையங்கள் (Polling Stations) எங்கு அமைந்திருந்தாலும் அந்த இடங்களில் மக்கள் எளிதாக அணுகக்கூடிய சூழல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் பனிப்பொழிவு

இதேவேளை, வாக்களிப்பு மையங்களுக்குச் செல்லும் பாதைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது முக்கிய முன்னுரிமையாக கருதப்படுவதாக டொரொன்டொ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பனி அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி சாலைப் பராமரிப்பு குழுக்கள், குளிர்கால பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள், பூங்கா மற்றும் மகிழ்ச்சி துறை அதிகாரிகள் இணைந்து பணிபுரிகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவில் நிலவும் கடும் பனிப்பொழிவு: மாகாண தேர்தல் பாதிப்பு | Ontario Provincial Election Affected By Heavy Snow

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே 71 செ.மீ. பனி குவிந்துள்ளது எனவும் இது கடந்த ஆண்டு முழுவதும் பெய்த பனியை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை பாதிப்புக்கள் குறித்து அச்சம் கொண்டவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.