முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு

ஜனாதிபதி நிதியத்தின் பயன்களை, பிரதேச செயலகங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு
விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு, இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் சேவைகளை, கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான முடிவு,
நிதியின் நன்மைகள் அடிமட்ட மட்டத்தை சென்றடைவதை உறுதி செய்வதையும், வசதியற்ற
சமூகங்களுக்கு அதிக நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம்

இந்தநிலையில், அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை தாமதங்கள் பற்றிய
பிரச்சினையும் இன்றைய கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு | Opposition Leader Meets Presidents Office

இதன்போது, வழக்கமான வேலை நேரத்திற்கு வெளியே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும்
மருத்துவ பணியாளர்களுக்கு, ஜனாதிபதி நிதியத்தின் மூலம், ஊக்கத்தொகைகளை
வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது, இந்த முயற்சி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் செயற்படுத்தப்பட்டு
வருகிறது.

அத்துடன் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை மற்றும்
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்; மருத்துவமனை வரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்
நடந்து வருகின்றன.

புதிய திட்டம்

நோயாளிகளுக்கு விரைவான மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த
நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாணவர்களுக்கான கல்வி ஆதரவை விரிவுபடுத்துவதற்கான
சாத்தியக்கூறுகளையும் ஆளுநர் குழு ஆராய்ந்துள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு | Opposition Leader Meets Presidents Office

தற்போதுள்ள முயற்சிகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்தும் அதே வேளையில், க.பொ.த.
சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களை இலக்காகக்
கொண்டு புதிய திட்டங்களைத் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் இதன்போது
வலியுறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில் ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடல் நிகழ்வில், பிரதமர் ஹரிணி
அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர்
ரோசன் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜெயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர்
நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் சந்திரசிறி மாயாதுன்னே ஆகியோரும்
பங்கேற்றுள்ளனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.