முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் வெற்றிக்காக ஒன்றுபட்ட எதிர்தரப்பு பிரதிநிதிகள்

எதிர்தரப்புகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒன்றுபட்டிருப்பதால் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒன்றுமையாக முன்னெடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11.09.2024) இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த 15 – 20 வருடங்களில் தமிழ் மக்கள் திருக்கோவில், கல்முனை, நாவிதன்வெளி உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்தாலும், போதியளவு பொருளாதார வலுவை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.

மக்களின் வளங்கள்

எனவே மக்களின் வளங்களை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று அனைத்து கட்சியினரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறோம்.

இப்பகுதி மக்களின் கஷ்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் ஊடாக இப்பகுதியின் அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலேயே இன்று இங்கு கூட்டத்தை ஏற்படுத்தினோம்.

ரணிலின் வெற்றிக்காக ஒன்றுபட்ட எதிர்தரப்பு பிரதிநிதிகள் | Opposition Representatives United Ranil Victory

இப்பகுதி மக்கள் நாட்டின் நெல் உற்பத்தியில் பெருமளவான பங்களிப்பை வழங்குகிறார்கள்.

திருகோணமலையில் அமைக்கப்படும் தொழில் வலயத்தை அம்பாறை வரையில் விரிவுபடுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார்.

எதிர்தரப்புகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒன்றுபட்டிருப்பதால் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் ஒன்றுமையாக முன்னெடுக்க முடியும்.

எனவே இரு வருடங்களுக்கு மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் இனியும் வரக்கூடாது என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் அமர்த்த வேண்டியது அவசியமாகவுள்ளது” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.