செல்வந்தர்களை காப்பாற்றுவதற்காகவே அன்றி கீழ்மட்ட மக்களை காப்பாற்றவே ஐக்கிய
மக்கள் சக்தி முன்நிற்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிக்கவெரட்டிய நகரில் நேற்று (30) இடம்பெற்ற வெற்றிப் பேரணியில் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“வறுமையை ஒழிப்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் தரமற்ற
கொள்கைகள் காரணமாக பெரும்பான்மையானோர் வறுமையில் சிக்கியிருக்கின்றார்கள்.
விவசாய கடன்
மக்களை ஓரங்கட்டி செல்வந்தர்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாக மாறியிருக்கின்றது.
இந்த அரசாங்கத்தால் விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்ய முடியாவிட்டாலும்
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக விவசாய கடனை இரத்து செய்வோம்.
அரச வங்கிகளுக்கு கடனை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடமும் நிதி அமைச்சரிடமும் கோரியிருந்த போதும், அவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை.
நட்புறவுகள் காரணமாக கோடிக்கணக்கான பணத்தை மீளப் பெறாது இரத்து செய்து
இருக்கின்றார்கள்.
மிகப்பெரிய செல்வந்தர்களின் கடனை இரத்து செய்ய முடியும்
என்றால், விவசாயிகளின் கடனையும் இரத்து செய்ய முடியும்.ஐக்கிய மக்கள் சக்தி
செல்வந்தர்களை பாதுகாப்பதில்லை.
கட்சி அரசியல்
கீழ்மட்ட பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே எமது
கட்சி அரசியலை முன்னெடுத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்தார்.
வறுமையில் சிக்கி இருக்கின்ற மக்கள் தொடர்ந்து வறுமையோடு வாழ முடியாது
என்பதால் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக சந்தர்ப்பம்
வழங்கப்படுகிறது.
வறுமையை போக்குவதற்காக ஜனசவிய, அஸ்வெசும கெமிதிரிய மற்றும்
சமூர்த்தி ஆகிய வேலைத்திட்டங்களின் சிறந்த விடயங்களை உள்ளடக்கி, நுகர்வு,
முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்குள்
உள்ளடக்கி, அவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா வீதம் வழங்கப்பட இருக்கின்றது.
பெண்களுக்கு இந்தத் தொகை பணம் வழங்கப்படும்” என குறிப்பிட்டார்.