முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோபா குழுவின் தலைவர் பதவி தொடர்பில் பிமல் ரத்நாயக்கவின் முக்கிய அறிவிப்பு

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தொடர்பில் இன்று (6) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

கோபா குழு

அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோபா குழுவின் தலைவர் பதவி தொடர்பில் பிமல் ரத்நாயக்கவின் முக்கிய அறிவிப்பு | Opposition To Lead Public Accounts Committee

கோப் குழுவின் (பொது நிறுவனங்கள் பற்றி குழு) தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம்.

முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை” என குறிப்பிட்டார்.

கால அவகாசம்

இதேவேளை, இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​துறைசார் குழுவை நியமிப்பதற்கு ஜனவரி 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் குறிப்பிட்டார்.

கோபா குழுவின் தலைவர் பதவி தொடர்பில் பிமல் ரத்நாயக்கவின் முக்கிய அறிவிப்பு | Opposition To Lead Public Accounts Committee

அத்துடன் நிதிக்குழு நியமனம் தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட 24 அமைச்சு ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்