ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) துண்டுப்பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகரை தாக்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி, பவ்வாகம பகுதியைச் சேர்ந்த நாற்பத்தொரு வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்
நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குச் சீட்டு விநியோகத்தில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகநபர் வர்த்தகரிடம் தேர்தல் துண்டுப்பிரசுரத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் அதனை நிராகரித்துள்ள நிலையில் சந்தேக நபர் முறைப்பாட்டாளரைத் தாக்கியுள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலில் காயமடைந்த முறைப்பாட்டாளர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.