படையப்பா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்துள்ளார். இதற்காக கோவாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து வருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று, அவருடைய சூப்பர்ஹிட் படமான படையப்பா ரீ ரிலீஸ் ஆகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிக் பாஸ் ஜூலி வருங்கால கணவர் போட்டோ.. குக் வித் கோமாளி பிரபலம் தான்!
ப்ரீ புக்கிங்
படையப்பா ரீ ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் 4500 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம் ரூ. 10 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்ப்படுகிறது.

