Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மானியங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை மையமான பெப்ரல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள்
இதற்குப் பதிலளித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த சலுகை வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்
அதேநேரம் பொது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த மானியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அவசியமானால் தேர்தல் நடைமுறையில் நியாயமான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தலுக்குப் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென பெப்ரலின் ஹெட்டியாராச்சி கோரியுள்ளார்.