முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் (PAFFREL) வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் பரந்த வார்த்தைகள், கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைப்பதற்கு பதிலாக அவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட காலஅவகாசத்தையும் முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வேட்பாளர்களான அனுர குமாரதிசநாயக்க (Anura Kumara Dissanayake) 26ஆம் திகதியும், சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) 23ஆம் திகதியும், ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விரைவிலும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம்

இந்த நிலையில் கடந்த காலங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களின் வாக்குறுதிகளுக்கும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள் | Pafrel Appeals To Sl Presidential Candidates

அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்கள் யதார்த்த சூழ்நிலையுடன் ஒத்துப்போகததாக காணப்பட்டமையே இதற்கான காரணம். அவர்கள் சந்தேகமற்ற வாக்காளர்களை கவர்வதற்காக வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

அல்லது அவர்களின் பதவிக்காலத்தின் இடையில் சூழ்நிலைகள் மாறியதால் அவர்களால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையேற்பட்டது.

பொருளாதார நெருக்கடி

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள் | Pafrel Appeals To Sl Presidential Candidates

அரசியலை சுத்தம் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலஎல்லையை முன்வைக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்துடன் செயற்திட்டமொன்றையும் பவ்ரல் கோரவுள்ளதுடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தங்கள் சொந்த கொள்கைகளை திட்டங்களை கொண்டிருப்பதற்கான உரிமையுள்ளது ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மக்களிற்கு தெரிவிக்கவேண்டும் என பவ்ரல் எதிர்பார்க்கின்றது.

ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை முன்வைக்குமாறு வேட்பாளர்களை கோரவுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள் | Pafrel Appeals To Sl Presidential Candidates

ஒவ்வொரு கொள்கை விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுப்பார்கள் என்பதை வேட்பாளர்கள் கோடிட்டுக்காட்டவேண்டும் எனவும் அந்த கொள்கைகளின் பொருளாதார அரசியல் சமூக தாக்கங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களிற்கு முன்வைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒரு வேட்பாளர் 1000 பாடசாலைகளை உருவாக்குவேன் என தெரிவித்தால் அதற்கான நிதியை அவர் எங்கிருந்து பெற்றுக்கொள்வார் என்பதை தெரிவிக்கவேண்டும், சமூகத்திற்கு அந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பலாபலன்கள் குறித்தும் குறிப்பிட வேண்டும், என ரோகண ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.