முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் (Pakistan) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காசாவில் (Gaza) ஹமாஸ் (Hamas) இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.

ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா (Hezbollah) இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

வான்வழித் தாக்குதல்

இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த முதலாம் திகதி 180 இற்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம் | Pakistan Condemns Israel Attack On Iran

இந்தநிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை (Tehran) குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதை ஈரான் உறுதி செய்தது.

கடும் கண்டனம்

இந்தநிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும்.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம் | Pakistan Condemns Israel Attack On Iran

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் அத்தோடு இந்தத் தாக்குதல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

ஏற்கனவே, கொந்தளிப்பான பிராந்தியத்தில் ஆபத்தினை விரிவாக்குகின்ற நிலையில் பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சுழற்சியான மோதல் மற்றும் விரிவாக்கத்துக்கு இஸ்ரேலே முழு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.