முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தானை போருக்கு இழுத்து விட்ட ஈரான்: இறுதியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம்

மத்திய கிழக்கு தற்போது தீவிரமான பதற்றத்தில் உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் நாளுக்கு நாள் கடுமையாகி வரும் நிலையில், பாகிஸ்தான் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தியொன்று சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஈரான் இஸ்லாமிய புரட்சி படையின் மூத்த அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் ஜெனரல் மோசென் ரீஸி, “இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், பாகிஸ்தான் அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது அணுகுண்டு வீசும்” என ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மேலும், “பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவளிக்க உறுதி அளித்துள்ளது. முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசு மறுப்பு

அதற்கு உடனடியாக பதில் அளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அதனை முற்றாக மறுத்தார்.

பாகிஸ்தானை போருக்கு இழுத்து விட்ட ஈரான்: இறுதியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம் | Pakistan Nuclear Strike If Israel Targets Tehran

அதன்போது, “பாகிஸ்தான் எந்தவொரு அணு ஆதரவும் ஈரானுக்கு அளிக்கவில்லை. நாங்கள் சர்வதேச அணு ஒப்பந்தங்களை பின்பற்றி வருகிறோம். எங்களது அணு ஆயுதங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே. மற்ற நாடுகளில் தலையிட நாங்கள் விரும்பவில்லை,” என அவர் தெளிவாக கூறினார்.

இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்ச்சி

இந்த நிலையில், இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து நான்காவது நாளாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றன.இதுவரை ஈரானில் 230 பேரும் இஸ்ரேலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானை போருக்கு இழுத்து விட்ட ஈரான்: இறுதியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம் | Pakistan Nuclear Strike If Israel Targets Tehran

இஸ்ரேல் ராணுவம், ஈரானின் ரொக்கெட் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.ஏவுகணைகளில் சில குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் பல்வேறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் எச்சரிக்கை

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அப்பாவி இஸ்ரேலியரை குறிவைத்த கொலைகாரர் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை போருக்கு இழுத்து விட்ட ஈரான்: இறுதியில் காத்திருந்த பெரும் ஏமாற்றம் | Pakistan Nuclear Strike If Israel Targets Tehran

இதனால் தெஹ்ரானில் உள்ள பொதுமக்கள் பகுதிகளையே எதிர்வரும் தாக்குதலில் இலக்காக்குவதாவும் அவர்கள் அதற்கான விலையை சீக்கிரம் அனுபவிப்பார்கள் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்