பிரித்தானியாவிலுள்ள (United Kingdom) பெண் குழந்தைகளை கடத்தி தவறான தொழிலில் ஈடுபடுத்துவதில் பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தலைமையிலான குழுவொன்று இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பொது அமைப்பு
இந்தநிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரித்தானியாவில் உள்ள 85 பகுதிகளில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த குழுக்கள் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
இக்குற்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட 1960 ஆம் ஆண்டு முதல் நடந்து வந்துள்ள நிலையில், தற்போது இது முன்னர் நினைத்ததை விட மிகவும் பரவலாக உள்ளது.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யாத பொது அமைப்புகளும் மற்றும் அதிகாரிகளும் கடுமையான கண்டனத்துக்குரியவர்கள்.
அதிகாரிகள் பாரபட்சம்
பாதிகப்பட்டவர்களின் நிறத்தின் அடிப்படையில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியுள்ளனர்.
இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, அதிகாரப்பூர்வ அமைப்புகள் கூட இவ்வழக்குகளை புறக்கணித்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர், ஏழை பெண்கள் என்பதுடன் இப்பெண்களுக்கு போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டு தகாத துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கடத்தி விற்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லக் கூடாது என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.