முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு

பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான
நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற் தொழிலில்
அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள்
ஏன் மேற்கொள்ளப்படவில்லை என அவரிடம் வினவிய
போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அரசாங்கம் பொறுப்பேற்ற பின் பல தசாப்த
காலமாக பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படாமல் இருந்த யாழ். பலாலி வீதியை
பொது மக்களின் பாவனைக்காக திறந்து விட்டோம்.

அரசாங்கம் நடவடிக்கை

அதேபோன்று பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை முழுமையாக பொதுமக்கள்
சென்று வழிபடக்கூடிய வகையில் எமது அரசாங்கம் இம் மாத இறுதிக்குள் நடவடிக்கை
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு | Palali Raja Rajeshwari Amman Worship

ஏனெனில் குறித்த ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் பல தசாப்த காலமாக
சிக்குண்ட ஆலயமாக காணப்படுகின்ற நிலையில் அதனை உரிய முறையில் மக்களிடம்
கையளிக்க வேண்டும்.

வழிபாட்டு உரிமை

எமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு இனத்தினுடைய வழிபாட்டு உரிமையையும்
புறந்தள்ளும் விதமாக செயற்படும் அரசாங்கம் கிடையாது.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு | Palali Raja Rajeshwari Amman Worship

ஆகவே குறித்த ஆலயத்தை முழுமையாக மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான அனைத்து
ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அதனை மக்களிடம் முழுமையாக
கையளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்