பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடராக உள்ளது.
இப்போது கதையில் மயிலின் அப்பா பாண்டியன் கடையில் இருந்து யாருக்கும் தெரியாமல் 1100 ரூபாயை எடுத்துச் செல்கிறார், அதனை சரவணன் பார்க்க மயிலிடம் சண்டை போடுகிறார்.

அரசி அன்றைய நாள் கணக்கை பார்த்துவிட்டு 1100 குறைவதாக கூறுகிறார், உடனே மது அருந்திய பாண்டியன் பழனிவேல் தான் பணத்தை எடுத்திருப்பார் என கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
அதோடு சரவணன் மயிலை பார்த்து கோபப்படுகிறார்.

புரொமோ
அறைக்கு வந்த சரவணன்-மயிலிடம், உன் அப்பா செய்த வேலையால் என் மாமா மீது கோபப்படுகிறார் அப்பா.
மயிலை உங்கள் குடும்பத்திற்கு உண்மையா இருக்கத் தெரியாது, உன் அப்பாவிடம் சொல்லி வை என கோபமாக பேசிவிட்டு தூங்குகிறார்.

ஆனால் மயில் தன் மீது தப்பு இருந்தும் தனது உடைகளை பையில் போட்டுக்கொண்டு பாண்டியனிடம் வந்து நான் என் வீட்டிற்கு செல்கிறேன் இங்கே வர மாட்டேன் என்கிறார்.
உடனே பாண்டியன்-கோமதி, சரவணனை அழைத்து கோபப்படுகிறார்கள், மயிலிடம் மன்னிப்பு கேட்கவும் வைக்கிறார்கள்.

