விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் தான் 12ம் வகுப்பு மட்டுமே படித்து இருக்கிறேன் என்பதை மறைத்து பட்டப்படிப்பு படித்திருப்பதாக திருமணத்தின்போது சொன்ன பொய்யை இன்னும் காப்பாற்றி வருகிறார்.
அவர் டீச்சர் வேலைக்கு செல்வது போல கிளம்பி சென்று வீட்டில் அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
அழகிய சேலையில் விருது விழாவுக்கு சென்ற சமந்தா.. அழகிய புகைப்படங்கள்
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தங்கமயில் ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.
அதன்பின் அவரது அப்பா மற்றும் அம்மா இருவரும் சென்று தங்கமயிலின் மாமனாரிடம் பேசுகிறார்கள். வேலைக்கு அனுப்புவது அவசியமா என கேட்கிறார்கள். ஆனால் அந்த முடிவில் பாண்டியன் உறுதியாக இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க.
தங்கமயில் ஹோட்டலில் டேபிள் துடைப்பது மற்றவர்களுக்கு தெரியவந்தால் என்ன நடக்கும்? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போவது உறுதி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.