பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த வாரம் கதையில் மயில் அப்பா பணம் திருடிய விவகாரத்தால் பழனிவேல் திருட்டுப்பழி சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்து செந்தில் மீனாவுடன் தனி வீட்டில் சந்தோஷமாக வாழலாம் என தனியாக சென்றால் மீனா எப்போதும் பாண்டியன் வீட்டிற்கே வந்துவிடுகிறார்.
சின்ன சின்ன பிரச்சனைகள் வர உடனே தீபாவளி கொண்டாட்டம் வந்துவிடுகிறது. அப்போது பழனிவேல் முதன்முறையாக தனது அக்காவிற்கு தீபாவளி சீர் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துகிறார்.

அடுத்த கதைக்களம்
இப்படி கொஞ்சம் பிரச்சனை, கொஞ்சம் சந்தோஷம் என இந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது.
அடுத்த வாரம் எப்படிபட்ட கதைக்களம் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பழனிவேலுக்கு அவர்களது அண்ணன்கள் காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற புதிய மளிகை கடை வைத்துக் கொடுத்துள்ளனர். அதில் பழனிவேல், சுகன்யா நிற்பது போன்ற புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.
View this post on Instagram

