விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களில் பல எதிர்பார்காத ட்விஸ்டுகள் வந்துவிட்டது.
அரசி பொய்யாக தாலி கட்டிக்கொண்டது, அதன் பின் அரசி இந்த நிலைக்கு போக சுகன்யா தான் காரணம் என எல்லோருக்கும் தெரியவந்தது என கதையில் திடீர் ட்விஸ்ட் வந்தது.
அதை தொடர்ந்து ராஜி காதலித்து கதிரை இல்லை என்கிற உண்மையும் தற்போது மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துவிட்டது.

அடுத்து தங்கமயில் தான்
இப்படி ரகசியமாக இருந்த பல விஷயங்கள் தற்போது எல்லோருக்கும் தெரியவந்துவிட்ட நிலையில், அடுத்து சிக்கப்போவது தங்கமயில் தான் என நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
டிகிரி படித்திருக்கிறேன் என பொய் சொன்னது தொடங்கி போலி நகையை வைத்து ஏமாற்றிகொண்டிருப்பது வரை அவர் பல விஷயங்கள் செய்து வருகிறார். அடுத்து தங்கமயில் எப்போது சிக்குவார்?
தங்கமயில் அப்பாவாக நடித்து வரும் சைவம் ரவி இதை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அதனால் தங்கமயிலும் விரைவில் சிக்குவார் என எதிர்பார்க்கலாம்.
View this post on Instagram

