பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில வாரங்கள் முன்பு தான் பழனியின் நிச்சயதார்த்தம் நின்றுபோனது. அதற்கு காரணம் அவனது சொந்த அண்ணன்களே பெண் வீட்டில் சொல்லி அதை நிறுத்தி இருப்பார்கள்.
பழனியை அவன் அண்ணன்கள் உடனேயே அனுப்பிவிட்டால் தான் திருமணம் நடக்கும் என பாண்டியன் தனது வீட்டை விட்டு அனுப்பி வைக்கிறார்.
மீண்டும் நின்ற திருமணம்
இந்நிலையில் பழனிக்கு மீண்டும் திருமணம் ஏற்பாடு ஆகும் நிலையில், அந்த திருமணமும் நின்றுவிடுகிறது. பெண் வீட்டார் சென்றுவிடும் நிலையில் பழனியின் வில்லன் அண்ணன்கள் வேறொரு பெண்ணை காட்டுகின்றனர்.
இந்த பெண் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். சரி என்று சொன்னால் இங்கேயே திருமணத்தை நடத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ.