பறந்து போ
தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம். இவர் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர்களுடன் இணைந்து அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பறந்து போ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.


நெப்போலியன் மகன் தனுஷ் பிறந்த நாள்!! காதலோடு மருமகள் செய்த விஷயம்.. அழகிய வீடியோ
OTT ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பறந்து போ திரைப்படம் வரும் ஆக. 5 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி, மராத்தி மொழிகளில் வெளியாகிறது.


