தனுஷ்
நடிகராக மட்டுமின்றி சமீபகாலமாக இயக்குநராகவும் சிறந்து விளங்கி வருகிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவந்தது.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. நான்காவதாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


மனைவி பிரியாவுடன் அட்லீ என்ன செய்கிறார் பாருங்க.. அழகிய வீடியோ!
அதிரடி பதிவு
இந்த படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், தனுசுடன் நடித்த அனுபவம் மற்றும் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
‘Mischievous’ பார்த்திபன்
Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!
குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடு படுகிறேன்.’இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்.Mr தனுஷுடன்… pic.twitter.com/KuVcc2eo53— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 10, 2025

