முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள கட்சிகள்

மட்டக்களப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில்
பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம் (12) அரசியல்
கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில்
இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கட்டுப்பணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை உட்பட
11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக பிரசாந்தன்
தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள கட்சிகள் | Parties Paid Money Local Council Elections

இதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி
அமைப்பாளர் தயானந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மண்முனைப்பற்று,மண்முனை மேற்கு பிரதேசபைகளுக்கு போட்டிடுவதற்காக இந்த
கட்டுப்பணம் இன்று காலை செலுத்தப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில்
இருந்து 146 பேர் தெரிவு செய்வதற்காக இன்று புதன்கிழமை (12) பிற்பகல் 3.00
மணிவரை அரசியல்கட்சி சுயேச்சைக்குழுக்கள் உட்பட 30 பேர் கட்டுப்பணம்
செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான்
தெரிவித்தார்.

வவுனியா

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட  இன்று (12.03) மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில்
கட்டுப்பணம் செலுத்தியது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும்
19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள கட்சிகள் | Parties Paid Money Local Council Elections

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ்
பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய
நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சங்கு
சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், புளொட்
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், ஈ.பி.ஆர்.எல். கட்சியின்
முக்கியஸ்தர் மோசஸ், ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரபத்மன்
உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள் கட்டுபபணத்தை செலுத்தியிருந்தனர்.

மன்னார்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய
மக்கள் சக்தி இன்றைய தினம் (12) மதியம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்
முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள கட்சிகள் | Parties Paid Money Local Council Elections

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச
சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான
கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை
தமிழரசுக்கட்சி இன்றைய தினம் (12) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள கட்சிகள் | Parties Paid Money Local Council Elections

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை
செலுத்தியுள்ளனர்.

இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட
இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை
செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.