தென் கொரியாவின்(South korea) புசான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் நேற்றிரவு(28) பயணிக்கத் தயாராக இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
176 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கி புறப்படவிருந்த ஏர் புசான் விமானத்தின் பின்பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
இதன்போது, 169 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதில் 4 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.