தெற்கு அவுஸ்திரேலியாவில் நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றையதினம்(19) பெய்ன்ஹாம் வீதியில் உள்ள எஸ்.டீ பீட்டர்ஸ் நகர மண்டபத்தில் பாஸ்கரன் அனுஷா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழ தேசியக்கொடி அவுஸ்திரேலிய தேசிக்கொடி மற்றும் அவுஸ்திரேலிய பழம்குடியினர் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அன்னை பூபதி… ஈழ விடுதலைக்கு தவமிருக்கும் அன்னையர்களின் குறியீடு…
மேடைநிகழ்வு
அதனை தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அனைவரும் மலர் வணக்கம் செய்து அகவணக்கத்துடன் மேடைநிகழ்வு ஆரம்பமானது.
மேடைநிகழ்வாக பரதநாட்டியம் கவிதை நினைவுரை என்பன இடம்பெற்று இறுதி நிகழ்வாக கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றூண்டி வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |