பாவ்னி-அமீர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி இணைவதை வழக்கமாக பார்த்து வருகிறோம்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதலர்களாக தங்களை அடையாளப் படுத்தாமல் வெளியே வந்து தங்களின் காதலை கூறியவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. நடிகை பாவ்னி தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வந்தவர்.
பிக்பாஸ் வீட்டில் தனது கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்த விஷயத்தை கூற அனைவருமே எமோஷ்னல் ஆனார்கள்.
திருமணம்
காதலித்து வரும் அமீர்-பாவ்னி தற்போது Living In வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். 2025ம் வருடம், அதாவது இந்த ஆண்டு வந்த காதலர் தினத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்கள்.
அதில் அமீர்-பாவ்னி இருவரும் ஏப்ரல் 20ம் தேதி தங்களது திருமணம் என அறிவித்தார்கள். இந்த நிலையில் அமீர்-பாவ்னி இருவரும் நெருக்கமாக Pre Wedding போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். இதோ அவர்களின் வீடியோ,
View this post on Instagram