இலங்கையில் இன்று
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.
காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்களிப்பு
நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை சுமுகமாக அளித்துள்ளனர்.
அமைதியான தேர்தல்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போல் இன்று நடைபெற்ற
உள்ளூராட்சி சபைத் தேர்தலும் அமைதியாக இடம்பெற்றுள்ளது.

28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் என மொத்தம் 339
உள்ளூராட்சி சபைகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.
8 ஆயிரத்து 257 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 75
ஆயிரத்து 589 பேர் போட்டியிட்டனர்.
சற்றுமுன்னர் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 877 உள்ளூராட்சி சபை வட்டாரங்களில்
அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரத்து 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று
வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வாக்கெண்ணும் பணிகளுக்காகத் தொகுதி மட்டத்தில் 5 ஆயிரத்து 783 மத்திய
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறித்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள்
சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

