முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பாக, அவர்களின் ஓய்வூதியங்களைக்
குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்று பிவித்துரு ஹெல உறுமயவின்
தலைவர் உதய கம்மன்பில வாதிட்டுள்ளார்.
இது, அரசியலமைப்பு மற்றும் உலகளாவிய சட்டக் கொள்கைகள் என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய மக்கள் சக்தியின் அறிக்கையில்
ஓய்வூதிய சலுகைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை இரத்து செய்யவோ அல்லது
குறைக்கவோ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சாத்தியப்படாது.
ஓய்வூதிய சலுகை
எனவே, தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய குழுவில் நியாயமான சட்ட
அறிவைக் கொண்ட எவரும் பணியாற்றியதாகத் தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அரசியலமைப்பின் 36 (2) ஆவது பிரிவின் படி, நாட்டின்
ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் சம்பளம்
மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அவர் உரிமை பெறுவார்.
அதன் பிறகு, அத்தகைய ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் அவர் உரிமை பெறுவார். சட்டபூர்வமான எதிர்பார்ப்பு கோட்பாட்டின் படி, ஓய்வூதிய சலுகைகளை பின்னோக்கிச்
செயல்படுத்தும் வகையில் அவற்றை குறைக்க முடியாது.
பொதுவாக தாம் எதிர்பார்க்கும் ஓய்வூதிய சலுகைகளுக்கு ஏற்பவே பொதுமக்கள்,
தங்கள் ஓய்வு வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.