ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நாள்தோறும் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு நாள்தோறும் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் பாரியளவு ஊழல் மோசடிகள் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணை
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை நடத்துவதற்கான பூரண அதிகாரங்களையும் சுயாதீனத்தன்மையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு ஊழல் மோசடி செயல்களையும் மூடிமறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது என கூறப்படுகிறது
கடந்த காலங்களில் விசாரணை செய்யப்படாத மற்றும் இடைநடுவில் நிறுத்தப்பட்ட விசாரணைகள், இந்த புதிய விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.